search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னாள் திமுக எம்எல்ஏ மாரிமுத்து"

    சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. மாரிமுத்துவுக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
    சென்னை:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதியில் 1996-2001-ம் ஆண்டு தி.மு.க. எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தவர் மாரிமுத்து. அவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவரது குடும்பத்தினரையும் குற்றவாளிகளாக சேர்த்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட செசன்சு கோர்ட்டு, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக கூறி, மாரிமுத்து, அவரது மனைவி துளசியம்மாள், மகன் பிரகாஷ் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்தது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து 3 பேரும் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், மாரிமுத்து உள்ளிட்ட 3 பேருக்கும் விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்திவைத்தும், தலா ரூ.5 லட்சம் பிணைத்தொகையுடன் 3 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டார்.
    ×